ஆண் தர்பூசணி.. பெண் தர்ப்பூசணி.. எதை வாங்கணும்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழம் தர்பூசணி பழம். இந்தப் பழம் பெரும்பாலும் கோடை காலத்தில் அதிகமாக சிறியவர்களாலும் சரி பெரியவர்களாலும் சரி விரும்பி சாப்பிடப்படுகிறது. இந்நிலையில் பலருக்கும் தெரியாத தர்ப்பூசணியை பற்றி ஒரு செய்தியை தான் நாம் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். தர்பூசணி வாங்கும் போது பழம் பெரிதாக இருக்கிறதா என்று பார்த்து தான் பெரும்பாலும் பலர் வாங்குவார்கள்.
இந்நிலையில் தர்பூசணி பழங்கள் ஆண் பெண் என இரு வகையாக பிரிக்கப்பட்டிருக்கிறது என்பது பலருக்கும் தெரியாத உண்மை. தர்பூசணி பழங்கள் பெரியதாகவும் நீர் வடிவத்துடன் இருக்கும் இத்தகைய பலன்கள் சுமாரான சுவையுடன் தான் இருக்கும். பெண் தர்பூசணி பழங்கள் முழுமையாக வட்ட வடிவத்தில் அதிக இனிப்பு சுவை கொண்டதாகவும் இருக்கும் இது தெரியாத பல பழங்கள் உருவத்தில் பெரியதாக அதிக இனிப்பில்லாத ஆண் பழங்களை தான் வாங்குகிறார்கள்.
மேலும் தர்பூசணி பழத்தை வாங்கும்போது இதையெல்லாம் கவனத்தில் கொண்டு வாங்குங்கள். தர்பூசணி பழத்தின் காம்பு காய்ந்திருந்தால் அந்த பழம் பழுத்து விட்டது என்று அர்த்தம். காம்பு பச்சையாக இருந்தால் முழுமையாக இன்னும் பழுக்கவில்லை என்று அர்த்தம். தர்பூசணி பழத்தின் மேல் வலை பின்னலாக பழுப்பு நிற கோடுகள் இருந்தால் அந்த பழம் அடிபட்டதாக நினைத்து பலரும் அந்த பழத்தை வாங்க மாட்டோம். ஆனால் அதுதான் மிகவும் ஆரோக்கியமான பழம் என்று யாருக்கும் தெரிவதில்லை. எனவே இதையெல்லாம் கவனத்தில் கொண்டு இனி தர்ப்பூசணி பழத்தை வாங்குங்கள்.




