இல்லத்தில் லட்சுமி குடியேற கண்டிப்பா இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க..!!
நம் இல்லத்தில் லட்சுமி குடியேறி நல்லவிதமான பலன்களையும் செல்வ செழிப்பையும் ஆரோக்கியத்தையும் பெறுவதற்கு கண்டிப்பா இதை எல்லாம் பாலோ பண்ணுங்க. சோம்பேறித்தனம் என்பது இருக்கவே கூடாது நீண்ட நேரம் தூங்க கூடாது. பணத்தை கணக்கு வைத்து செலவு செய்ய வேண்டும். மற்றும் இடது கையால் பணத்தை பிறருக்கு கொடுப்பதை தவிர்த்தல் வேண்டும். பிறர் வாழ்வதை கண்டு பொறாமை கொள்ளக்கூடாது. மற்றும் ஒருவர் நமக்கு செய்த நன்றியை ஒருபோதும் நாம் மறக்கக்கூடாது. காசுகளை தூக்கி எறிந்து விளையாடுவது ஒருபோதும் கூடாது.
மற்றும் கோபத்தை முற்றிலுமாக தவிர்ப்பது மிகவும் நல்லது. சிரித்த முகத்தோடு அனைவரையும் உபசரித்தல் வேண்டும். மற்றும் முக்கியமாக காலை 6:00 மணி மற்றும் மாலை 6 மணி என இருவேளையும் விளக்கேற்றுதல் நல்ல பலனை கொடுக்கும். கடன் வாங்குவதே முடிந்தவரை நாம் தவிர்க்க வேண்டும். மற்றும் வாசல் படியில் உட்காருவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. மாலை 6 மணிக்கு மேல் தலை வார கூடாது. இரவு நேரங்களில் துணிகளை துவைக்க கூடாது. அளவோடு ஆசைப்பட வேண்டும்.




