சுக்கை மிஞ்சிய வைத்தியம் இல்லை..!! கண்டிப்பா இதை எல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!!

சுக்கை மிஞ்சிய வைத்தியம் இல்லை..!! கண்டிப்பா இதை எல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!!

சுக்கு இதில் ஏராளமான மருத்துவ பலன்கள் உள்ளன.அது நம்மில் பலருக்கும் தெரியாது.அதைப் பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
சுக்கை இழைத்து பற்று போட தலைவலி முற்றிலுமாக நம்மை விட்டு நீங்கும். சுக்கு சிறுதுண்டு வாய் விட்டு மென்று அடக்கி வைக்க பல் வலி தீரும். மேலும் சுக்கை நசுக்கி ஒரு துணியில் சிறு மூட்டை கட்டி காதில் வைத்திருக்க காதலிப்பு மற்றும் நீரடைப்பு தீரும். அதுமட்டுமின்றி, சுக்கு பொடி வெந்நீரில் கலந்து குடிக்க அஜீரணம் நீங்கும். வாந்தி எடுப்பவர்கள் கூட இதை கொடுத்தால் வாந்தி நின்று விடும். மார்பு எரிச்சல் மற்றும் வயிற்று வலி நெஞ்சு வலி ஆகியவற்றை போக்கும்.

சளி இருமலை போக்கும். வாத நோய்களை கட்டுப்படுத்தும். குறிப்பாக ஆசனவாய் கடுப்பு எரிச்சல் முதலியவற்றிற்கு இது நல்ல மருந்து. இதய நோய்கள் மற்றும் காய்ச்சலை கட்டுப்படுத்துகிறது. நரம்புகள் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்த மருந்தாக இது விளங்குகிறது. சுக்கு தைலம் தலைக்கு தேய்த்து குளிக்க ஒற்றைத் தலைவலி மற்றும் சைனஸ் மற்றும் காது வலி போன்ற பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம். தினமும் ஏதாவது ஒரு நேரம் சுக்கை நாம் உட்கொள்ள நோய்கள் வராமலும் வந்த நோய்கள் நம்மை விட்டு நீங்கவும் உதவியாக இருக்கும்.

Read Previous

ஆன்மீக குறிப்பு..!! இல்லத்தில் லட்சுமி குடியேற கண்டிப்பா இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க..!!

Read Next

பிரசவத்திற்கு பின் பெருத்த வயிறு ஆகாமல் இருக்க கண்டிப்பா இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular