கர்நாடகா: மங்களூருவில் இளைஞர்களை குறிவைத்து, ஹனிட்ராப், ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்து வந்த இளம்பெண் கைதாகியுள்ளார். அப்பெண்ணுடன் எடுத்த படங்கள் ஆபாச வலைத்தளங்களில் வெளியிடப்பட்டதால், உடுப்பியைச் சேர்ந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டதால் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பெண், இளைஞர்களை குறிவைத்து பழகி அந்தரங்க காட்சிகளை படம்பிடித்து வைத்துக் கொண்டு பணம் பறித்து வந்துள்ளார். அதே போல், உடன் தங்கியிருந்த தோழிகளின் குளியலறை காட்சிகளை வீடியோ எடுத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.




