உத்தரப்பிரதேசத்தின் சஹாரன்பூரில், ஏழை ஒருவரின் குடிசையிலிருந்து குழந்தையைத் திருடி, உத்தரகாண்ட் தம்பதியினருக்கு ரூ.3.5 லட்சத்திற்கு விற்க ஒப்பந்தம் செய்த ஆயுர்வேத மருத்துவர் கோபால், அவரது மகன் அங்குஷ், சல்மான், பிரீத்தி, தீபா மற்றும் நைனா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தையை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சிசிடிவி கேமராக்கள் இல்லாத இடங்களில், சாலையோரம் வசிக்கும் குடும்பங்களில் இருந்து இந்த கும்பல் குழந்தைகளை திருடி வந்தது விசாரணையில் தெரியவந்தது.




