இட்லிக்கு கண்டிப்பா இந்த வேர்கடலை பொடி செஞ்சு தொட்டு சாப்பிட்டு பாருங்க சுவை அம்புட்டு ருசியாக இருக்கும்..!!

Oplus_131072

வேர்க்கடலை பொடி செய்வது எப்படி….

தேவையான பொருட்கள்

வரமிளகாய் – 10,

வேர்க்கடலை – 1/2 கப்,
கடலைப்பருப்பு – 1/4 கப்,
கறிவேப்பிலை – 2 கொத்து,
எண்ணெய் – 1 ஸ்பூன்
பூண்டு பல் – 5,
உப்பு – சுவைக்கு

செய்முறை

அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும வரமிளகாய் போட்டு வறுத்த பின்னர் வேர்க்கடலை, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

வேர்க்கடலையும் கடலைப்பருப்பும் பொன்னிறமாக வறுபடும் வரை இந்த பொருட்களை எல்லாம் கை விடாமல் வறுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்த பொருட்கள் அனைத்தும் வறுபட்ட உடன் அடுப்பை அணைத்து விடுங்கள்.

கடாயில் இருக்கும் பொருட்களை ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆற வைத்துவிடுங்கள்.

அவை நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு அதோடு பூண்டு பல், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான். மணக்க மணக்க காரசாரமான வேர்கடலை பொடி தயார்.

இந்த வேர்க்கடலை பொடியில் நல்லெண்ணையை ஊற்றி இட்லியில் பிரட்டி அப்படியே சாப்பிட்டு தான் பாருங்களேன்.

Read Previous

அசுர வேகத்தில் முடிவளர.. கண்டிப்பா இந்த மாதிரி செஞ்சு பாருங்க..!!

Read Next

‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டம் 12ஆம் தேதி தொடக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular