அசுர வேகத்தில் முடிவளர.. கண்டிப்பா இந்த மாதிரி செஞ்சு பாருங்க..!!

அசுர வேகத்தில் முடிவளர…

முடி உதிர்வை நிறுத்தி அடர்த்தியாக வளர வீட்டிலேயே எளிய முறையில் எண்ணெய் தயார் செய்து பயன்படுத்தலாம்.
தேவையான_பொருட்கள்:
தேங்காய் எண்ணெய்- 2 லிட்டர்
கறிவேப்பிலை- ஒரு கைப்பிடி
செம்பருத்தி பூ- 10 பூ
செம்பருத்தி இலை- ஒரு கைப்பிடி
கரிசலாங்கண்ணி ஒரு கைப்பிடி
வேப்பிலை- ஒரு கைப்பிடி
மருதாணி இலை- ஒரு கைப்பிடி
சாம்பார் வெங்காயம்- 5
சோற்றுக்கற்றாலை- ஒரு கப்
வெந்தயம்- 2 ஸ்பூன்
பெரிய நெல்லிக்காய்- 3
கருஞ்சீரகம்- 2 ஸ்பூன்
வெட்டிவேர்- ஒரு கைப்பிடி

*தயாரிக்கும் முறை*
முதலில் ஒரு பெரிய இரும்பு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு காயவிடவும்.பின் அதில் கறிவேப்பிலை, வேப்பிலை, மருதாணி இலை மற்றும் கரிசலாங்கண்ணி, இடித்த வெங்காயம், இடித்த நெல்லிக்காய் சேர்க்க வேண்டும்.இதில் கற்றாழையை நன்றாக கழுவி சேர்க்க வேண்டும்.
இதனுடன் வெந்தயம், கருஞ்சீரகம், வெட்டி வேர் போன்றவற்றை சேர்த்து மிதமான தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும்.சேர்க்கப்பட்ட பொருட்கள் நன்றாக நிறம் மாறி வரும் வரை அதனை காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.ஒருநாள் முழுவதும் அப்படியே வைத்து பின் அதனை வடிகட்டி ஒரு குவளையில் வைத்து பயன்படுத்தலாம்.இந்த எண்ணெய் முடிகொட்டுவதை நிறுத்தி, முடி கருமை நிறத்துடன் அடர்த்தியாக வளர மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Read Previous

பிரியாணி மசாலா வீட்டிலேயே இப்படி செஞ்சு யூஸ் பண்ணுங்க பிரியாணி சுவை அதிகரிக்கும்..!!

Read Next

இட்லிக்கு கண்டிப்பா இந்த வேர்கடலை பொடி செஞ்சு தொட்டு சாப்பிட்டு பாருங்க சுவை அம்புட்டு ருசியாக இருக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular