‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தை சென்னையில் வரும் 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் வாயிலாக 34,809 ரேஷன் கடைகளைச் சேர்ந்த 21,70,454 மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் இல்லங்களிலேயே அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு மாதமும் 2வது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.




