காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை இதய நோயால் பெரிதும் பாதி படுகின்றனர், இதய நோய் ஏற்படுவதற்கு முன்பு சில சமிக்கைகள் நமக்கு தெரிய வரும் அவற்றை நன்கு கவனித்து உடனே மருத்துவரிடம் பரிசோதனை மேற்கொள்ளும் பொழுது இதய நோயிலிருந்து நம்மை காப்பாற்ற முடியும்..
இதய நோய் ஏற்படுவதற்கான காரணிகள் உடல் பருமன் அளவுக்கு அதிகமாக அதிகரித்தல், அளவுக்கு அதிகமாக புகைபிடித்தல் மது அருந்துதல் இவை இதய நோயை உண்டு பண்ணும், மேலும் மன அழுத்தம் தொடர்ந்து மன கவலை சோர்வு இவை இதய நோயை ஏற்படுத்தும், உடலுக்கு தேவையான உழைப்பை தராமல் ஓய்வாக இருப்பதும் ஒரு வகையான உடல் உறுப்புகளுக்கு சோர்வை தந்து இதய நோயை ஏற்படுத்தும், அதேபோல் ரத்த அழுத்தத்தால் இதய நோய் உண்டாகும், மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் இதய நோய் வருவதற்கான அறிகுறிகள் உண்டு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், அது மட்டும் அல்லாமல் நமது முன்னோர்களுக்கு இதய நோய் இருந்திருந்தால் அதுவும் அந்த சந்ததியில் இதய நோய் வருவதற்கான அறிகுறியாக அமையும், மேலும் இதே ஆரோக்கியத்திற்கான வாழ்க்கை முறை எடை கட்டுப்பாடு, புகை பிடித்தலை நிறுத்துதல் மாறுபக்க கொழுப்பை தவிர்த்தல் நடை ஓட்டம் நீச்சல் போன்ற உடல் பயிற்சியில் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் ரத்தத்தில் உள்ள கொழுப்பை நாளடைவில் குறைக்க உதவும் ஒமேகா-3 கொழுப்பு உள்ளெடுப்பை அதிகரிக்க மீன் எண்ணெய் அருந்தலாம் உளவியல் அழுத்தத்தை குறைக்கவும், இதன் மூலம் இதய நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்..!!




