இனி, ATM போக தேவை இல்லை..!! வீட்டில் இருந்தபடியே பணம் எடுக்கலாம்..!!

தற்போதைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் வங்கிகளில் பணத்தை சேமித்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலும், அந்த பணத்தை எடுப்பதற்கு அடிக்கடி வங்கிகளுக்கு செல்லாமல், அருகில் இருக்கும் ATM மையங்களில் பணத்தை எடுப்பதற்காக வங்கியின் மூலம் ATM கார்டுகள் பயனாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இனி, ATM மையத்திற்கும் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக நீங்கள் பணத்தை பெற முடியும். அதனை பற்றி விரிவாக கீழே பார்ப்போம்.

அதாவது, “ஆதார் ஏடிஎம்கள்” மூலமாக உங்களின் பயோமெட்ரிக் அடையாளங்களை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பணத்தை பெறலாம். ஆனால், உங்கள் வங்கி கணக்குடன் ஆதார் அட்டையை இணைத்திருக்க வேண்டும். இதற்கு எந்த வித முன் கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை மற்றும் ஒரு முறை ரூ.10,000 வரை பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். மேலும், இந்தியா போஸ்ட் வங்கி இணையதளத்தில் நீங்கள் விண்ணப்பித்த பிறகு, தபால்காரர் உங்கள் வீட்டிற்கே வந்து பயோமெட்ரிக் அடையாளங்களை சரிபார்த்த பின், உங்களுக்கு பணத்தை வழங்குவார். இதை எப்படி விண்ணப்பிப்பது குறித்த விவரங்களை விரிவாக கீழே பார்க்கலாம்.

1. https://ippbonline.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பாக்கத்திற்கு செல்லவும்.

2. Door Step Banking என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

3.உங்கள் சுய விவரங்களான பெயர், தொலைபேசி எண், மெயில் ஐடி மற்றும் முகவரி உள்ளிட்டவற்றை பதிவிடவும்.

4. அருகில் இருக்கும் தபால் நிலையத்தின் பெயர் மற்றும் விவரங்கள், எவ்வளவு தொகை வேண்டும் என்பதை பதிவிடவும்.

5. நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் பெயர் மற்றும் விவரங்களை பதிவிடவும்.
6. ” I AGREE” என்பதை கிளிக் செய்யவும்.

7. உங்கள் கோரிக்கை சமர்பிக்கப்பட்டதும், நீங்கள் பதிவு செய்த தொகையானது உங்கள் வீட்டிற்கே வந்து வழங்கப்படும்.

Read Previous

கரூர்: வேலம்மாள் பள்ளி அருகே டூவீலர்கள் மோதல்..!! பெண் படுகாயம்..!!

Read Next

எளிய மனிதர்களிடம் நாம் காட்டும் அன்பு..!! அது தெய்வத்திடம் காட்டும் அன்பை போல..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular