*கீரை வாங்கும் போது,அதை விற்பவரிடம்”கீரையை பறித்து அந்த தூசியல்லாம் சுத்தம் செய்து கட்டு கட்டா கட்டுவது ரொம்ப சிரமமா இருக்குமே அண்ணே”என அன்பாக விசாரித்துக்கொண்டே கீரை வாங்குங்கள்!
*சாலையோரத்தில் காய்கரி விற்பவரிடம்,”அண்ணே காய்கறி நேரா வருதா இல்லை இடையில வாங்கி விற்கிறீங்களா!ஏதாவது உங்க சம்பளத்துக்கு ஏத்த லாபம் கிடைக்குதா”என அக்கறையுடன் விசாரித்து காய்கறி வாங்குங்கள்!
*தள்ளு வண்டியில் பழங்கள் விற்பவர்களிடம்
*பழங்கள் சேதாரம் ஆனால் எப்படினே நஷ்டத்தை சமாளிக்கிறீங்க!!பொழுதுக்கும் ஒத்தக்காலிலே நிற்கிறீங்களே சம்பளத்திற்காவது எதுவும் கிடைக்குமாணே”என பேசிக்கொண்டே பழங்கள் வாங்குங்கள்.
*சாலையில் பாய் வித்து வருபவரிடம்,”என்ன அண்ணே பாய் நீங்க முடைகிறீர்களா இல்ல வாங்கி விற்கிறீங்களா!ஏதாவது லாபம் கிடைக்குதாண்ணே”என சகசமாக உரையாடி பாய் வாங்குங்கள்!
*கேனில் டீ விற்பரிடம்,”வெள்ளனமே எழுந்துருவீங்களாணே!காலையில் சாப்பிட்டீங்களா”என அன்பாக கேட்டுக்கொண்டே டீ வாங்கி குடியுங்கள்!
நீங்கள் அன்றாடம் காணும் எளிய மனிதர்களிடம் சகசமாக,அன்பாக பேசுங்கள் அது தெய்வத்திடம் பேசுவதுபோல!
எளிய மனிதர்களிடம் நாம் காட்டும் அன்பு!
அது தெய்வத்திடம் காட்டும் அன்பை போல![]()




