கரூர் மாவட்டம், வடக்கு காந்திகிராமம், தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் மனைவி பொன்மணி. இவரும் இவரது சகோதரர் மதி என்பவரும் அவர்களது டூவீலரில் அக்டோபர் 6-ம் தேதி மதியம் 2: 30 மணி அளவில், கரூர் – திண்டுக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
மதி டூவீலரை ஓட்டிச் செல்ல டூ வீலரின் பின்னால் பொன்மணி அமர்ந்து சென்றார். இவர்களது வாகனம் வேலம்மாள் பள்ளி அருகே சென்றபோது, அதே சாலையில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, கொடையூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர், மதி ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்த பொன்மணிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள நாச்சிமுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பொன்மணி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெள்ளியணை காவல்துறையினர் டூவீலரை அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய செல்வராஜ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.




