இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவரை பாம்பு மூலம் கொன்றதாக மனைவி மீது குற்றச்சாட்டு – மீரட்டில் அதிர்ச்சி..!!

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழவும், கணவரின் இன்சூரன்ஸ் தொகையைப் பெறவும் மனைவி ஒருவர் திட்டமிட்டு கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் விசாரணையின்படி, டாமினி என்ற பெண் தனது கணவரின் ரூ.20 லட்சம் இன்சூரன்ஸ் பணத்தைப் பெறுவதற்காகவும், கள்ளக்காதலனுடன் வாழ்க்கையைத் தொடரவும் சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.

திட்டத்தின் ஒரு பகுதியாக, கணவருக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்ததாகவும், பின்னர் அவர் தூங்கிய நிலையில் படுக்கையில் விஷப் பாம்பை விட்டதாகவும், அதன் மூலம் அவர் உயிரிழந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை இயற்கை மரணம் போல காட்ட முயற்சி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், போலீசார் நடத்திய விசாரணையில், மொபைல் போன் அழைப்புப் பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் மூலம் சந்தேகத்திற்குரிய தகவல்கள் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, டாமினி மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக மேலும் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Read Previous

வாழ்க்கையை அழகாக கையாளும் சில உண்மைகள்..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

கோவை: ரோந்து பணியில் இருந்த காவலர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular