கோவை துடியலூர் அருகே ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண்ணை, ரோந்து பணியில் இருந்த காவலர் வினோத்குமார் (32) தனியாக அழைத்துச் சென்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக இளம்பெண்ணின் நண்பர் அளித்த புகாரின் அடிப்படையில், துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, சக காவலரான வினோத்குமாரை நேற்று கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் கோவை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கின் சூழ்நிலைகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




