எனது பக்கத்து வீடு என்னைக் கவலை கொள்ளச் செய்கிறது.
தம்பதியர் இருவரும் அதிகாலையிலேயே எழுகின்றனர்.
அரக்கப் பரக்க வேலைக்குச் செல்கின்றனர்.
மாலையாகும் போது வீடு திரும்புகின்றனர்.
அவர்களுக்கு ஒரு மகளும் மகனுமிருக்கின்றனர்.
இரவு ஒன்பது மணிக்கெல்லாம் அவர்களது வீட்டின் சகல வெளிச்சங்களும் அணைந்து விடுகின்றன.
மறுநாள் காலையிலும் இருவருமே நேரகாலத்தோடு எழுகின்றனர்.
வேலைக்குச் செல்கின்றனர்.
மாலையில் வீடு திரும்புகின்றனர்.
ஒன்பது மணிக்கெல்லாம் வெளிச்சங்கள் அணைந்து விடுகின்றன.
என் பக்கத்து வீடு என்னைக் கவலை கொள்ளச் செய்கிறது.
அவர்கள் நல்ல மனிதர்கள்.
அவர்களை நான் நேசிக்கிறேன்.
ஆனால் அவர்கள் மூழ்கிக் கொண்டிருப்பதாகவே நான் உணர்கிறேன்.
எனினும் என்னால் அவர்களைக் காப்பாற்ற முடிவதில்லை.
வாழ்க்கையின் விலங்குக்குள் அவர்கள் பிழைத்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
வீடற்றவர்களாகவும் அவர்கள் இல்லை.
ஆனால் அவர்கள் செலுத்திக் கொண்டிருக்கும் விலைதான் மிகவும் பயங்கரமானதாக இருக்கிறது.
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நான் அந்த வீட்டைப் பார்ப்பேன்.
அந்தப் பொழுதில் அந்த வீடும் என்னைப் பார்க்கும்.
பார்த்துக் கொண்டு அழும், ஆம், நிச்சயம் அழும்!
அது நடக்கப் போவதை உணர்கிறேன்.
படித்ததில் பிடித்தது..




