உங்கள் நினைவுகளை கொஞ்சம் தட்டி விடுங்கள்..!! பழைய நினைவுகள்..!! படித்ததில் பிடித்தது..!!

உலக அதிசயமாக இருக்கின்றன.

 

ஒரு மணி நேரத்துக்கு அப்போதெல்லாம் 50 காசு அல்லது ஒரு ரூபாய் என்றிருக்கும்.

அதிலும் சின்ன சைக்கிள் கூட உண்டு.

 

கேரியர் வைத்த சைக்கிள்,

கேரியர்இல்லாத சைக்கிள்,

டைனமோ வைத்த சைக்கிள் என்று வாடகைக்கு விடுவார்கள்.

 

‘நோட்ல பேரும் டைமும் எழுதிக்கிட்டு எடுத்துட்டுப் போ..’ என்று விசிறிக்கொண்டே,

தாத்தாவோ பாட்டியம்மாவோ சொல்லுவார்கள்.

 

உடனே வாடகை சைக்கிள் எடுக்க வந்த சின்னப்பசங்க முதல் பலரும்

10.20 மணிக்கு சைக்கிள் எடுத்தால், 10.30 என்று எழுதுவார்கள்.

அந்த ஒரு பத்து நிமிஷம்,

இன்னும் கொஞ்சம் ஓட்டலாமே என்கிற ஆசையின் வெளிப்பாடுதான் அது..!

 

வாடகை சைக்கிள் எடுப்பவர்கள், நியூமரலாஜிப்படி அந்த எண் கொண்ட சைக்கிளை எடுப்பார்கள்.

 

’ஏழாம் நம்பர் வண்டி வெளியே போயிருக்குப்பா..’ என்று சொன்னால், அந்த சைக்கிள் வரும்வரைக்கும் காத்திருப்பார்கள்.

 

இன்னும் சில காமெடிகளும் நடக்கும்.

 

சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு,

தெரிந்தவரிடம் அல்லது நண்பரிடம் அல்லது உறவினரிடம் பணம் கேட்கச் செல்வார்கள்.

 

பணம் கிடைக்காத நிலையில், சைக்கிளை விடவும் பணமிருக்காது. அதற்காக, நான்கைந்து நாட்கள் சைக்கிளை வைத்துக்கொண்டு சுற்றுபவர்களும் உண்டு.

பிறகு பணம் வந்ததும் சைக்கிளை ஒப்படைப்பார்கள்.

 

இப்போது எதற்கெடுத்தாலும் பைக்கை எடுக்கிறோம்.

கறிவேப்பிலை வாங்கவே,

டூவீலரை எடுத்துக் கொண்டு தான் செல்கிறோம்.

 

அப்போது சைக்கிளில் சிட்டாகப் பறந்து, எட்டெல்லாம் போட்டு,

கெத்துக் காட்டுவோம்.

 

இப்போதெல்லாம் ஒரு வீட்டில், இரண்டு அல்லது மூன்று டூவீலர்கள் இருக்கின்றன.

அப்பாவுக்கு பைக்,

மனைவிக்கு ஆக்டீவா,

மகளுக்கு ஸ்கூட்டி என்று நிற்கின்றன.

 

சைக்கிளுக்கும் நமக்குமான பந்தம்… பால்யத்தில் இருந்தே இரண்டறக் கலந்தது.

எத்தனை ராயல் என்பீல்டுகளும் யமஹாக்களும் இருந்தாலும்,

நமக்கும் நம் உடலுக்கும் எனர்ஜியையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கிற சைக்கிளை, மறக்கமுடியுமா..?

 

உங்கள் நினைவுகளை கொஞ்சம் தட்டி விடுங்கள்..

Read Previous

இன்றைய குட்டி கதை..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

அரை கீரை பல வகை நன்மைகள் உடலுக்கு தரக்கூடியது..!! உடலுக்கு ரொம்ப நல்லது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular