இரத்தக் கொதிப்பை ஏற்படுத்தக்கூடிய காரணிகள் என்னென்ன தெரியுமா..??
இயற்கையாகவே வயதாக ஆக இரத்த நாளங்கள் அதனுடைய ஜவ்வு தன்மையை இழப்பதால் நாளங்களின் அகலம் குறுகி இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. மரபணுக்களால் மட்டும் இன்றி அதே உணவு உடற்பயிற்சி இன்மை புகைபிடித்தல் என்று பெற்றோர் வாழ்ந்த சூழ்நிலையிலே வாழும் பொழுது குழந்தைகளுக்கும் அந்த நோய்கள் வரும் வாய்ப்பு அதிகமாகிறது. தற்போதைய வாழ்க்கை முறையில் அதிக ரத்த அழுத்தத்திற்கு மன அழுத்தமே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. உடல் எடை அதிகரிப்பை பொறுத்து ரத்த கொதிப்பு வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. உணவில் அதிகம் உப்பு சேர்த்துக் கொள்ளுதல் அதிக கொழுப்பு மற்றும் குறைவான நார்ச்சத்துள்ள உணவுகள் மது மற்றும் புகைப்படக்கம் சரியான உடற்பயிற்சியின்மை நீரிழிவு நோய் போன்றவற்றாலும் ரத்த கொதிப்பு ஏற்படும்.




