இருசக்கர வாகனத்தை வெயிலில் நிறுத்தினால் பொட்ரோல் ஆவியாகுமா..??

Oplus_131072

இருசக்கர வாகனத்தை வெயிலில் நிறுத்தினால் பொட்ரோல் ஆவியாகுமா?

இந்த கேள்வியும் ,இதனை தொடர்ந்து சில வெடிக்கும் வாகனங்களின் பதிவும் வாட்சப்பில் உலா வந்த வண்ணமுள்ளது .இன்று இதற்க்கு தீர்வு காணலாம் .

இரு சக்கர வாகனத்தின் எரிபொருள் டேங்க் மூடியில் முன்பெல்லாம் ஒரு சிறு குண்டூசி முனையளவுக்கு சிறு துளையிருக்கும் .

வெயிலில் வாகனங்களை நிறுத்தும்போது ஆவியாகும் பெட்ரோல் சிறிதளவு அழுத்தத்தை அதிகரிக்கும் .அந்த சமயம் சிறிதளவு பெட்ரோல் ஆவியானது வெளியேற முயற்சிக்கும் .அப்போது குக்கரின் விசில் வழியாக நீராவி வெளியேறுவதுபோல சிறிதளவு பெட்ரோல் ஆவி அந்த சிறு துளை வழியாக வெளியேறும் .

அதே வழியாக வாகனம் குளிர நேர்கையில் வெற்றிடம் சமாளிப்பதற்காக சிறிதளவு காற்று உள்நுழையும் .

தற்போதுள்ள வாகனங்களில் அந்த குறைபாடு களையப்பட்டுள்ளது.

பெட்ரோல் டேங்கில் பெட்ரோல் போடும் பெரிய துளையை மூடியில் இருக்கும் ரப்பரானது ஆவியாகமலும் ,பெட்ரோல் வெளியே சிந்தாமலும் அழுத்தமாக மூடியிருக்கும் .அந்த மூடியிலும் ,டேங்கிலும் ஒரு சிறு தீக்குச்சி பருமனுக்கு சிறு துளையிருக்கும் .

அதன் வழியாக வெயிலில் நிறுத்திய வாகனத்தின் பெட்ரோல் ஆவியாக நேர்ந்தால் சிறிதளவு அழுத்தம் காரணமாக அந்த சிறு துளையின் மூலமாக வெளிவந்து டேங்கில் இருக்கும் சாவி துவாரத்தின் வழியாக வெளியேறிவிடும் .

பாதுகாப்பாக .

அதனால் பயமொன்றும் தேவையில்லை .குக்கர் வெடிப்பதுபோல இரு சக்கரவாகனங்கள் வெடிக்கவும் செய்யாது .

ரிசர்ச் அண்ட் டெவெலப்மென்ட்(R&D ) எனப்படும் இருசக்கரவாகனத்தின் தயாரிப்பில் பங்குபெறும் குழுவானது வாகனத்தின் ஒவ்வொரு பாகத்தையும் முறையாக ஆராய்ந்து இதுபோன்ற குறைபாடுகளை களைந்தபின் தான் வாகனங்கள் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வருகின்றது .

அடுத்தமுறை எரிபொருள் நிரப்பும்போது அந்த துளையை கவனியுங்கள்…

 

Read Previous

21 மூலிகைகளை கொண்டு பாரம்பரிய முறையில் வீட்டில் தயார் செய்த இயற்கையான மூலிகை குளியல் பொடி..!!

Read Next

வாட்ஸ் அப், ட்விட்டர், பேஸ்புக், மொபைல் எதுவுமே இல்லாத காலத்திய இளைஞர்கள் சந்தோசத்தில் மிதக்கும் தருணம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular