கனடாவில் பரவி வரும் காட்டுத்தீயால் எழும் புகை அமெரிக்க நகரங்களுக்கு பரவி காற்று மாசுபாட்டை ஏற்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தப் பிரச்சினையை கட்டுப்படுத்த கனடா உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
டிரம்பின் இந்தக் கருத்து, அமெரிக்கா–கனடா இடையேயான இருதரப்பு உறவில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




