உடலில் உள்ள பலவிதமான பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் தண்ணீர் இதுதான்..!!

அன்றாட காலகட்டத்தில் ஆரோக்கியம் என்பது மிகவும் அவசியமான ஒன்று. நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் இந்த நோய்க்கு இந்த மருந்து என்று வீட்டிலேயே இயற்கையான முறையில் வைத்தியம் பார்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வார்கள். ஆனால் இன்றோ ஆரோக்கியமும் குறைந்துவிட்டது மருத்துவ செலவுகளும் அதிகமாகிவிட்டது என்று சொன்னால் நியாயம் தானே.. இந்த வகையில் குறிப்பாக காலநிலை மாறும் போது ஒரு சிலருக்கு சளி இருமல் போன்ற பிரச்சனைகள் வரும். இந்தப் பிரச்சினைகளை சரி செய்ய வீடுகளில் அதிகமாகவே இருக்கும் துளசி கற்பூரவள்ளி போன்றவற்றை கொண்டு கசாயம் செய்தும் ஒரு சிலர் இஞ்சி போன்றவற்றை சேர்த்து கசாயம் செய்து கொடுப்பார்கள். ஏனென்றால் இஞ்சி சளி பிரச்சனைக்கு எதிராக போராடும் ஒரு காரணியாகும். மேலும் இந்த இஞ்சியில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது அதை பற்றி தற்போது பார்க்கலாம்.

இதய ஆரோக்கிய பிரச்சனை இருப்பவர்கள் இஞ்சியை தண்ணீரில் கலந்து குடித்தால் உடல் ஆரோக்கியம் அதிகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும், ரத்த நாளங்கள் போன்றவற்றை சரியாக வேலை செய்ய இஞ்சி தண்ணீர் மிகவும் சிறந்தது.இஞ்சி டீ ஒரு சிலர் அடிக்கடி குடிப்பார்கள் அப்படி குடிக்கக்கூடாது ஏனென்றால் இஞ்சியை அதிகமாகவும் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ற போல எதுவாக இருந்தாலும் அளவாகத் தான் சேர்த்துக் கொள்ள வேண்டும். இஞ்சியை அதிகமாக உட்கொள்ளும் போது வாதம் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. மேலும் இஞ்சி தண்ணீர் பசியை கட்டுப்படுத்தி வளர்ச்சிதை மாற்றத்தையும் அதிகரிக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் டிடாக்ஸ் வாட்டரில் இஞ்சி பயன்படுத்தலாம்.

Read Previous

நீண்ட நாட்களாக உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்கள் இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Read Next

ஒரு வீடோ, நாடோ அதற்கு ஆதாரமாக இருப்பது பெண்களே!! படித்ததில் ரசித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular