மஞ்சள் பூசணி பயன்கள்…
மஞ்சள் பூசனிக்காயை பரங்கிக்காய் என்றும் அழைப்பார்கள். மஞ்சள் பூசனிக்காய் பல ஊட்டச்சத்துகளை உள்ளடக்கியது. மஞ்சள் பூசணிக்காய் மருத்துவ பயன்கள் மற்றும் ஊட்டச்சத்துகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
ஊட்டச்சத்துகள்:
245 கிராம் சமைத்த பூசணியில்,
கலோரிகள்: 49
புரதசத்து – 2 கிராம்
கார்போஹைட்ரேட் – 12 கிராம்
நார்சத்து – 3 கிராம்
வைட்டமின் ஏ – 245% (தினசரி உட்கொள்ள வேண்டிய அளவில்)
வைட்டமின் சி – 19%
பொட்டாசியம் – 16%
காப்பர் – 11%
மாங்கனீசு – 11%
வைட்டமின் பி 2 – 11%
வைட்டமின் ஈ – 10%
இரும்புசத்து – 8%
சிறிய அளவில் மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், ஃபோலேட் மற்றும் பி வைட்டமின்கள் உள்ளன.
மேலும் பூசணியில் வைட்டமின் ஏ ஆக மாறும் கரோட்டினாய்டான பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது.




