பீகார்: பிரமோத் பஸ்வான் கடந்த 2019ல் இளம்பெண்ணை மணந்தார். மனைவியை அடித்து துன்புறுத்தியதால் அவர் தனியே சென்றுவிட்டார். பிறகு 2வது திருமணம் செய்த பிரமோத் மனைவியை அடித்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்து சில மாதங்களுக்கு முன்னர் ஜாமீனில் வந்த அவர் அண்மையில் 19 வயதான குமாரியை 3வதாக மணந்தார். குமாரியுடன் ஏற்பட்ட சண்டையில் கூரான ஆயுதத்தால் அவரை தாக்கி பிரமோத் கொன்றார். குற்றவாளியை போலீஸ் தேடுகிறது.




