உங்களின் உணர்வுகளுக்கு செவிகொடுங்கள்…
இந்தப் பதிவை ஆண்கள் முழுமையாகப் படிப்பது சிறந்தது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், ஆண்கள் என்றாலே உணர்வுகளை கட்டுப்படுத்த தெரியாதவர்கள் எனலாம். தங்களுடைய உணர்வுகளுக்கு உடனடி பதில்களைத் தேடுபவர்கள் எனவும் கூறலாம். அதற்கு ஏற்றவாறு தான் ஆண்களின் உடல் ரசாயனங்களும் செயல்படும். அதுவே அவர்களுக்கு நன்மையாகவும் முடிகிறது, தீமையாகவும் முடிகிறது.
இங்கே நான் என்ன கூறவிரும்புகிறேன் என்றால், முதலில் உங்களின் ஹார்மோன்களின் செயல்பாடுகளை முழுமையாக அறிந்து கொள்ளுங்கள். அது எம்மாதிரியான தருணங்களில் எம் மாதிரியான எண்ணங்களை நமக்கு வெளிப்படுத்துகிறது. எம்மாதிரியான உணர்வு கிளர்ச்சிகளை நமக்கு ஏற்படுத்துகிறது என அறிதல் மிகவும் முக்கியம். அதை நாம் அறிந்து கொண்டாலே, அவற்றை எங்கே வெளிப்படுத்த வேண்டும் எங்கே கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறான புரிதல் நம்மை சரியான திசையில் நோக்கி பயணிக்க செய்யும். தேவையில்லாத பல பிரச்சினைகளிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளவும் இது உதவும். இங்கு ஆண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையே, உணர்வுகளை சரிவர கையாளத் தெரியாத தான்.
ஒன்று நம் உணர்வுகளை தவறான இடத்தில் வெளிப்படுத்துகிறோம். அல்லது வெளிப்படுத்த வேண்டிய இடத்தில் வெளிப்படுத்த தவறிவிடுகிறோம். எனவே உங்களைப் பற்றி முதலில் அறிந்து கொள்ளுங்கள். எது தேவை தேவையற்றது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
அதீத உணர்வு வெளிப்பாடும் தவறு.
உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருப்பதும் தவறு.
தவறான இடத்தில் நம் உணர்வுகளை வெளிப்படுத்துவதும் தவறு.
சரியான இடத்தில் தவறான உணர்வுகளை வெளிப்படுத்துவதும் தவறு.
உங்கள் உடலின் ரசாயன மாற்றங்களை உற்று நோக்குங்கள். அது எவற்றிற்கு அடிமைபட்டுள்ளது. அவை என் வாழ்வில் எம்மாதிரியான இன்னல்களையும் இன்பங்களையும் பெற்றுத்தரப்போகிறது என்று நான்கு சிந்தியுங்கள்.
உணர்வுக் கட்டுப்பாடுகள் மிக முக்கியம்..




