Oplus_131072
உமிழ்நீர்
எனும் அமுதம்…
ஊறு மமிர்தத்தை யுண்டி யுறுப்பார்க்கில்
கூறும் பிறப்பறுக்க லாம்.
– ஔவையார்.
நமக்குல்
சுரக்கும் அமிர்தம் .
{2000 வருடங்களுக்குb முன்பே திருமூலர்
கூறிய அனைத்து நோய்களையும் நீக்கும் அறிவியல் உண்மைகள் }
பொதுவாக நம் வேலை செய்யும் போது
கையிலோ காலிலோ அடிபட்டால் அந்த இடத்தில் தண்ணீர் கூட இல்லை என்றால் உடனே எச்சில் துப்பி அதை துடைப்பார்கள்..
கிச்சனில் காய்கறி வெட்டும்போது கையில் இரத்தம் வந்து விட்டால்
உடனே நம் செய்வது வாயில கையை வைப்போம்..
ஏனென்றால் உமிழ்நீர் ஒரு மருத்துவ குணம் வாய்ந்தது.
சித்தர்கள் மிகப் பெரிய விஞ்ஞானிகள்.
இயோகத்தால் ஞானமடைந்து, ஞானத்தால் உண்மையை உணர்ந்தவர்கள்.
உணவே
இல்லாமல்
உயிர் வாழ முடியும் என்று
வாழ்ந்து காட்டியவர்கள்.
பல நாட்கள்
உணவே இல்லாமல் தவம் செய்து பேரானந்தத்தை அனுபவித்தனர்.
அது எப்படி?
நவீன உடலியல்
உமிழ் நீரானது
வாய்,
கன்னம் ,
தாடை,
போன்ற
வாய் பகுதியில்
சுரப்பதாகச்
சொல்கிறது.
அது எங்கே சுரந்தாலும்
அதற்கு அடித்தளமாக
இருந்து
அதை அதிகமாகச்
சுரக்கச் செய்வதும்,
கட்டுப்படுத்துவதுமான
வேலைகளைச்
செய்வது
எது என்றால்
பிட்யூட்டரி சுரப்பியே ஆகும்.
இதை சித்தர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த உமிழ்நீரைத்தான்
அவர்கள் “காயப்பால்”
என்று சொல்வார்கள்.
எச்சிலானது
நாறும்.
உமிழ்நீர்
நாற்றமடிக்காது.
இது எப்பொழுதாவது நமக்கு வாயில் ஊறும். மருத்துவர் ஊசி போடுவதற்கு முன் பீய்ச்சி அடிப்பாரே, அது போல சுரந்து அடிக்கும்.
வெட்டவெளியாகிய சிரசில் ஊறுவது, தன்னை உண்பவரின் பசியை போக்குவது. ஆட்டுப்பால், மாட்டுப்பால் போல காயப்பால்
நாற்ற மடிக்காது,
என்று சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
இந்த உமிழ்நீரில்
Starch (மாவு பசை) இருக்கிறது.
தாவரங்கள்
இந்த மாவு பசை மூலமாகத்தான் தேவையான உணவை தயாரித்துக் கொள்கின்றன.
அதற்க்குச்
சூரிய ஒளியும் நீரும் இருந்தால் போதும். சித்தர்களும் இந்த வழிமுறையையே பின்பற்றி இருக்கிறார்கள்.
உமிழ்நீரில் இருந்து
இந்த மாவு பசையை பெற்ற உடல்
அதன் உதவியோடு உடலுக்குத் தேவையான சக்தியை தயாரித்துக் கொள்ளும்.
எப்பொழுதும் துப்பிக் கொண்டே இருப்பவர்களுக்கு எப்பொழுதாவது சுரக்கும்
இந்த உமிழ்நீரின்
ஆற்றல் கிடைக்காமலே போய்விடுகிறது.
சித்தர்கள் உணவை நன்றாக மென்று அரைத்து
நீர் போலாக்கி
சாப்பிடச் சொன்னார்கள்.
அப்படிச் சாப்பிடும்போது உமிழ்நீர் சுரந்து உணவுடன் கலந்து நமக்கு பலம் கிடைக்கும்.
நீரை மெதுவாகச் சாப்பிடுவது போலக் குடிக்கச் சொன்னார்கள்.
அப்படிக் குடிக்கும் போது உமிழ்நீர் நீருடன் கலந்து நமக்கு நல்ல பலன் தரும்.
எச்சில் என்பது வாயில் ஊறும் உமிழ்நீர்.
அது உணவை செரிப்பதற்கும்,
வாயின்
உள் பகுதியையும்,
தொண்டைக்
குழியையும்
ஈரப்பதமாக
வைத்திருப்பதற்கும்
உதவுகிறது.
உடல் என்னும்
வீட்டில் இருக்கும்
ஒன்பது
வாசல்களில்
வாயும் ஒன்று.
இது உணவை உண்பதற்கும்,
பேசுவதற்கும்
பயன்படுகிறது.
உமிழ்நீரை
வெளியில்
துப்புதல் ஆகாது
என சித்தர்கள்
முதல் தற்கால
மருத்துவர்கள் வரை
கூறுகின்றனர்.
புளிப்பு,
இனிப்பு
இவற்றின் சுவையை
உணர்ந்தால்
வாயில் உமிழ்நீர்
தானாக ஊறும்.
அதுபோல்
உடலுக்கு ஒவ்வாமை
ஏற்படுத்துகின்ற
உணவுகளை
சாப்பிட்டாலும்
உமிழ்நீர்
அதிகம் சுரக்கும்.
உடலில்
உமிழ்நீர் சுரப்பிகள்
மூன்று இணைகள்
உள்ளன.
(1) பரோடிட் சுரப்பி
(2) சப்மாண்டிபுலர் சுரப்பி
(3) சப்லிங்குவல் சுரப்பி
பரோடிட் சுரப்பி
—————————-
இது காதுகளுக்குக் கீழே அமைந்துள்ளது.
இதன் நாளங்கள் வழியாக கன்னங்களின் உட்புறம் இரண்டு மேல் கடவாய் பற்களுக்கு மேல் இந்த சுரப்பு நாளங்களின் துவாரங்கள்
உள்ளன.
இந்த நாளங்களுக்கு
Stents நாளங்கள் என்று பெயர்.
இது மனித உடலில்
நீர் வறட்சி ஏற்படும்போதெல்லாம் அதிகம் சுரந்து வறட்சியைக் குறைக்கிறது.
சப்மாண்டிபுலர் சுரப்பி
—————————————–
இது பரோடிட் சுரப்பிகளுக்குக் கீழே
அமைந்துள்ளது.
இதன் நாளங்கள் நாக்கின் அடிப் பகுதியில் துவாரங்களாக அமைந்துள்ளன.
சப்லிங்குவில் சுரப்பி
————————————–
கன்னங்களின்
உள்ளே இரண்டு பக்கங்களிலும் அமைந்துள்ளன.
இதன் துவாரங்கள் வாய் முழுவதும் அமைந்துள்ளன.
உமிழ்நீரின் தன்மைகள்
——————————————
உமிழ்நீர் காரத்தன்மை கொண்டது. இது அதிக என்சைம்களைக் கொண்டது. இதில் ஆண்டிபயாடிக் அதிகம் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
உமிழ்நீர் சராசரியாக ஒரு மனிதனுக்கு
1500 மி.லி. அளவு சுரக்கிறது.
இந்த அளவு உண்ணும் உணவின் அளவைப் பொறுத்தும் மன எண்ணத்திற்கும் ஏற்றவாறு மாறுபடுகிறது.
உமிழ் நீரின் முக்கிய பணி சீரணமாக்குவது. நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது பழமொழி.
நொறுங்க என்பது நன்றாக மென்று
என்று பொருள்.
உணவை நன்கு மென்று சாப்பிட்டால்
நோயின்றி நூறுவயதுக்கு மேல் வாழலாம் என்று கூறுகின்றனர்.




