Oplus_131072
முருங்கைக்கீரையை நீர் நிறையவிட்டு வேகவைத்து, பூண்டு, சிறிய வெங்காயம், வெந்தயம் போட்டு சாதாரணமாக ரசம் செய்வதுபோலச் செய்து, காலை உணவுடன் பருகலாம்.
உயர் ரத்த அழுத்தத்துக்குக் காரணமான ரத்தக் கொழுப்பைக் குறைக்க / கரைக்க, எடை குறைக்கும் தன்மை உடைய கோக்கம் புளி அல்லது குடம் புளியைப் பயன்படுத்தலாம். Thangam nasar
கிரீன் டீ ஆன்டிஆக்ஸிடென்ட் நிறைந்தது என்பதால், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு வரக்கூடிய மாரடைப்பைத் தடுக்க உதவும்.
உணவில் மஞ்சள் தூள், லவங்கப்பட்டையை அடிக்கடி சேர்த்துக்கொள்வது நல்லது. இவை இதயத்துக்கு இதம் அளிப்பவை.
முறையான வாழ்வியல், சரிவிகித உணவு, வருமுன் காக்கும் மருத்துவம் இவை இருந்துவிட்டால் உயர் ரத்த அழுத்தம் தவிர்க்கக்கூடியதே!…




