Oplus_131072
பாதாம் மற்றும் உலர் திராட்சை ஆகிய இரண்டுமே உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டவை என்பதால், அவற்றை எப்போதும் இரவில் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் சாப்பிடுவதே ஆகச்சிறந்த முறையாகும்.
ஒரு கைப்பிடி அளவு, அதாவது தோராயமாக 5 முதல் 8 பாதாம்பருப்புகளை இரவில் ஊறவைத்து, காலையில் அதன் தோலை நீக்கிவிட்டு வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பாதாமைத் தோலுடன் சாப்பிட்டால், அதில் உள்ள ‘டானின்’ என்ற வேதிப்பொருள் ஊட்டச்சத்துக்கள் உடலில் உறிஞ்சப்படுவதைத் தடுத்துவிடும்.
உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த காலை உணவாகும்.
பாதாமைப் போலவே இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த உலர் திராட்சையை ஒரு நாளைக்கு 10 முதல் 15 வரை ஊறவைத்துச் சாப்பிடலாம்.
இது இரத்த சோகையை நீக்கி, செரிமானத்தை மேம்படுத்தும். எனினும், இதில் இயற்கைச் சர்க்கரை அதிகமிருப்பதால், நீரிழிவு நோயாளிகள் இதனை மருத்துவரின் ஆலோசனைப்படி மிகக் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
காலையில் வெறும் வயிற்றில் இந்த இரண்டையும் சேர்த்துச் சாப்பிடுவது, நாள் முழுவதும் உடலுக்குத் தேவையான அசாத்திய ஆற்றலை வழங்குவதுடன் உடலின் வளர்சிதை மாற்றத்தையும் (Metabolism) சீராக்குகிறது.




