220 கோயில்களில் அறங்காவலர் பதவி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

 

 

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 220 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமிப்பதற்கான விண்ணப்ப கால அவகாசம் ஆகஸ்ட் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

முன்னதாக, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 12-ம் தேதியுடன் நிறைவடைய இருந்தது. தகுதியானவர்கள் அதிகளவில் பங்கேற்கும் வகையில், தற்போது கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

 

அறங்காவலர் பொறுப்பில் ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள், உரிய ஆவணங்களுடன் இணையதளம் வாயிலாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

‘டிராகன்’ படப்பிடிப்பில் ஜூனியர் என்.டி.ஆருக்கு காயம்; இன்று தோள்பட்டை அறுவை சிகிச்சை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular