ஒரு கை முருங்கைக்கீரை இருந்தால் இந்த கீரை வடை செய்து பாருங்கள்..!!

Oplus_131072

ஒரு கை முருங்கைக்கீரை இருந்தால் இந்த கீரை வடை செய்து பாருங்கள்

200 கிராம் கடலைப்பருப்பை 2 மணிநேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளுங்கள் .

ஒரு மிக்ஸி ஜாரில் 1 ஸ்பூன் சோம்பு ,
2 காஞ்சமிளகை ,
ஒரு சின்னத்துண்டு இஞ்சி ,
சின்னத்துண்டு பட்டை ,
ஒரு கையளவு ஊறவைத்த கடலைப்பருப்பு சேர்த்து கொரகொரவென்று அரைத்து மீதமுள்ள கடலைப்பருப்பரை எல்லாம் சேர்த்து ரெண்டுதடவை பல்ஸ் மோடில் அரைத்து எடுத்துக்கவும்

ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை சேர்த்து 1 பொடியா நறுக்கிய வெங்காயம் ,
1 பொடியா நறுக்கிய பச்சைமிளகாய் ,
தட்டின 2 பூண்டு ,
ஒரு கை அளவு முருங்கைக்கீரை , ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு பிணைந்து கொள்ளவும்

உடனடியாய் எண்ணெய் சூடு செய்து வடையை தட்டி போட்டு சாப்பிட்டு பாருங்கள்

அதிக சத்து நிறைந்த கீரைவடை ரெடி.

Read Previous

அம்மா சொன்ன அற்புதமான பொய்களில் ஒன்று எது தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

மருத்துவமனையில் மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி..!! வெளியான தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular