Oplus_131072
கடவுள் சிலையை கல்லில் வடிக்க காரணம் என்ன ?
சில கோவிலுக்குள் நுழையும் போதே மனசு ரிலாக்சாகிறதை நாம் கவனித்திருப்போம்.. அது சிறியதோ பெரிய கோவிலோ கவனிக்காமல் அந்த கோவில் நமக்கு பிடித்து போகும். அதற்கு காரணம் கருவறையில் இருக்கும் சிலையின் சக்திதான். வீடு கட்டுறதுக்கு வாஸ்து இருக்குற மாதிரி கோவில் கட்டுறதுக்குன்னு ஆகம விதி இருக்கு. அதுப்படி கோவில் கட்டி சிற்ப சாஸ்திரப்படி சிலையை கருங்கல்லில் வடித்து வேதங்களில் சொல்லி இருக்கிறது மாதிரி பூஜைகள் செய்து வந்தால் நாம் கோவிலுக்குள் நுழையும்போதே நம் உடலுக்குள் ஒரு சக்தி ஊடுறுவதை கவனிக்கலாம்.
தங்கம், வெண்கலம், வெள்ளி, செம்பு மாதிரியான உலோகங்களை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகம். நல்லதோ கெட்டதோ அது எந்த சக்தியா இருந்தாலும் தன் வசம் இழுத்துக்கொள்ளும் ஆற்றல் கல்லுக்கு உண்டு. கல்லில் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம்ன்ற பஞ்ச பூதங்களின் தன்மை உள்ளது. இத்தன்மை எந்த உலோகத்திலும் கிடையாது.
கருங்கல்லில் நீர் இருக்கிறதால் எத்தனை வெப்பத்திலும் இருந்தும் சட்டென இதோட இயல்பான குளிர் நிலைக்கு மாறிடும். கல்லுக்குள் நீரூற்று இருப்பதை பார்த்திருப்போம். இது நிலத்தில் கிடைக்கிறது. நிலத்தோட தன்மை கல்லில் இருப்பதால் செடிகள் வளருது. கல்லில் நெருப்பின் சக்தி இருப்பதை கற்கள் உரசும்போது பறக்கும் தீப்பொறியிருந்து அறியலாம். கடினத்தன்மை கொண்ட கல்லில் காற்றும் இருக்குங்குறதுக்கு தேரை உயிரோடு இருப்பதால் உணரலாம். ஆகாயத்தைப்போல ஒலியை தன்னுள் ஈர்த்து பின் வெளியிடும் சக்தி உண்டு. அதனாலதான் கோவில்களில் எதிரொலி கேட்கிறது. இறை வடிவங்களான பஞ்சபூதங்களின் வடிவில் இருக்கும் கருங்கல்லில் சிலை செய்து சாமி கும்பிறோம். அபிஷேகம், ஆராதனைகளை முறைப்படி செய்து சிலையில் இருக்கும் பஞ்சபூதங்களின் தன்மையை அதிகரித்து அதை வணங்கும்போது நல்ல அதிர்வுகளை உண்டாக்கி நம் உடலில் பாய்ந்து நல்ல பலன்களை கொடுக்குது.




