#மாமியார்_மருமகள் !
♦மாமியார் என்றால் மருமகளை கொடுமைபடுத்துவாள்,
♦மருமகள் என்றால் மாமியாரை மதிக்க மாட்டாள்;
♦மாறாக, கணவனை கைக்குள் போட்டுக்கொள்வாள் என்கிற எண்ணம்தான்,
♦இன்றைய மாமியார்கள், மருமகள்களின் மூளையில் பதிவு செய்யபட்டு இருக்கிறது.
♦தவறாக பதிவு செய்யபட்ட அந்த கண்ணோட்டத்தில் …
♦ஒருவரையொருவர் அணுகுவதால் மாமியாரும், மருமகளும்
எலியும், பூனையுமாக மாறி விடுகிறார்கள்.
♦மாமியார் மருமகளை பற்றி மகனிடமோ,
♦மருமகள் மாமியாரை பற்றி கணவனிடமோ..
♦இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி,
♦பெரும் பிரச்சினையையே ஏற்படுத்தி விடுகிறார்கள்.
♦இந்த விஷயத்தில் பாவம் கணவன்மார்கள்தான்!
♦பெற்றத் தாயிடம் கோபப்படவா?
♦தாரத்திடம் கோபப்படவா?
♦என்று தெரியாமல், மண்டையை பிய்த்துக்கொள்கிறார்கள்.
♦இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க என்ன செய்யலாம்?
♦முதலில் மாமியார்களுக்கு…
♦மருமகளை உங்களது இன்னொரு மகளாக கருதுங்கள்.
♦வீட்டுக்கு வந்ததும் மகனை கையில் போட்டுக்கொள்வாள்…
♦ என்று அக்கம் பக்கத்தில் பெருசுகள் யார் சொன்னாலும்,..
♦அதை இந்த காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடுங்கள்.
♦நானும் உனக்கு அம்மாதான்.
நீயும் எனக்கு இன்னொரு மகள்தான்’ என்று..
♦அடிக்கடி மருமகளிடம் சொல்லி பாருங்கள்.
♦அவள் தன் அம்மாவை உங்களிடமும் காண்பாள்.
♦பெற்ற மகளிடம் உரிமையோடு கோபிக்கலாம்.
♦ஆனால், மருமகளிடம் அப்படிச் செய்யக்கூடாது.
♦ஏனென்றால், மாமியார் எப்படிபட்டவர் என்பதை அவள் உங்கள் வீட்டிற்கு வந்த பிறகுதான் தெரிந்து கொள்கிறாள்.
♦நீங்கள் அவளிடம் ஒரு தாய்க்குரிய அன்பையும், பாசத்தையும், பரிவையும் அவளிடம் கொட்டினால்,
♦அவளும் உங்களை தன் அம்மாவாக ஏற்றுக்கொள்வாள்.
♦மருமகள் மனதிற்குள் ஏதாவது பிரச்சினைகளில் புழுங்கினால் அவளுக்கு அன்பாய் ஆதரவு சொல்லுங்கள்.
♦பிரச்சினை தீர வழிகாட்டுங்கள். மருமகள் வீட்டிற்கு வந்த பிறகு அவளிடம் எல்லா வேலையையும்
♦ஒப்படைத்துவிட்டு ஓய்வெடுப்பதும், டி.வி.யில் சீரியல் பார்ப்பதும்,
♦பக்கத்து வீட்டு பெருசுகளிடம் ஊர் வம்புகளை பேசுவதும் நல்லதல்ல.
♦அவளோடு நீங்களும் வேலைகளை ஆதரவாய் பகிர்ந்து கொள்ளுங்கள்.
♦அப்படிச் செய்தால் அவளோ வீட்டு வேலைகளை தானாக செய்ய ஆரம்பித்து விடுவாள்.
♦அதற்காக அப்படியே விட்டுவிடாதீர்கள்.
♦நீங்களும் முடிந்தவரை உதவுங்கள். மருமகளுக்கு உடல்நலம் சரியில்லை என்றால்
♦தாய்பாசத்தை கொட்டி கவனியுங்கள்.
♦உங்கள் அன்பில் மெய்சிலிர்த்துபோவாள் அவள்.
♦இனி மருமகள்களுக்கு…
♦டி.வி. சீரியல்களில் பயமுறுத்தும் மாமியார் மாதிரிதான் நம் மாமியாரும் இருப்பாள் ..
♦என்ற கற்பனைகளை தூக்கியெறிந்து விடுங்கள்.
♦அவரை உங்களது இன்னொரு தாயாக கருதுங்கள்…
♦எந்தவொரு தாயும் தனது மகன் கடைசிவரை தனக்கு துணை நிற்க வேண்டும் என்றுதான் நினைப்பாள்.
♦அதனால், கணவன் எப்போதும் தன்னுடன்தான் இருக்க வேண்டும்,
♦தன் பேச்சை மாத்திரம்தான் கேட்க வேண்டும் என்று எண்ணாதீர்கள்.
♦எல்லா மாமியார்களுமே மருமகளிடம் எதிர்பார்ப்பது நல்ல குணத்தையும்,
♦விட்டுக்கொடுக்கும் மனபான்மையும்தான்.
♦`நீங்களும் எனக்கு அம்மாதான். உங்கள் மகளிடம் பழகுவது போலவே என்னிடமும் பழகுங்கள்’ என்று சொல்லி பாருங்கள்.
♦மருமகள் என்றால் என் மருமகள் போல்தான் இருக்க வேண்டும்’
♦என்று மற்றவர்களிடம் புகழ ஆரம்பித்துவிடுவார்.
♦வயதான காலத்தில் எல்லா மாமியாரும், மாமனாரும் எதிர்பார்ப்பது..
♦அமைதியான வாழ்க்கையையும், ஓய்வையும்தான்.
♦அதற்கு எந்த பங்கமும் ஏற்படுத்திவிடாதீர்கள்.
♦சாப்பாட்டை மாமியாரே போட்டு சாப்பிட வேண்டும் என்று எண்ணாதீர்கள்.
♦அவருக்கு நீங்களும் அடிக்கடி உணவு பரிமாறி, அவருக்கு பிடித்த உணவு வகைகளை செய்து கொடுத்து அசத்துங்கள்.
♦வயதானாலே உடல் ரீதியான தொந்தரவுகள் நிறைய வரும்.
♦அந்தநேரத்தில், மாமியாருக்கு ஒரு மகளாய் நின்று பணிவிடை செய்யுங்கள்.
♦அந்த வயதான உள்ளம் உங்களை பாராட்ட வார்த்தை தெரியாமல் மகிழ்ச்சியில் தவிக்கும்.
…..




