Oplus_131072
உடலில் திடீரென நமைச்சல், எரிச்சல், சுடும் உணர்வு போன்றவை ஏற்பட்டால் உடனடியாக பூஜைக்கு பயன்படுத்தும் கற்பூரத்தை மெதுவாக தேய்மானமாகப் பயன்படுத்துவார்கள். கற்பூரம் தோலில் தடவும்போது “குளிர்ச்சி” உணர்வு தருவதால், அந்த இடத்தில் உள்ள எரிச்சல், நமைச்சல் உணர்வு சில நொடிகளில் குறைந்து ஜில்லென இருக்கும். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
ஆனால் எல்லோருக்கும் கற்பூரம் பொருந்தாது. சிலருக்கு தோல் கரகரப்பு, சிவப்பு, எரிச்சல் அதிகரிப்பு போன்ற அலர்ஜி பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால் நேரடியாக தேய்வதற்கு முன், சிறிதளவு கற்பூரத்தை மணிக்கட்டு பகுதியில் மெதுவாக தேய்த்து 5–10 நிமிடம் கவனித்து பாருங்கள். எந்த விதமான எதிர்மறை விளைவும் இல்லை என்றால் மட்டுமே பாதிக்கப்பட்ட இடத்தில் பயன்படுத்தவும்.
கண்கள், திறந்த காயங்கள், அரிப்பு ஏற்பட்டுள்ள சென்சிட்டிவ் பகுதிகளில் பயன்படுத்தக் கூடாது. எரிச்சல் நீடித்தாலோ, சிவப்பு அதிகரித்தாலோ உடனே தண்ணீரால் கழுவி, தேவைப்பட்டால் மருத்துவரை அணுகவும்.




