Oplus_131072
ஒரு நாள் இரண்டு நண்பர்கள் பாலைவனத்தில் நடந்து சென்றார்கள்.
பாதையில் சிறிய சண்டை ஏற்பட்டது. ஒருவன் கோபத்தில் மற்றொருவனை அறைந்தான்.
அதை கோபப்படாமல் தாங்கிய நண்பன் மணலில் எழுதினான்:
👉 “இன்று என் நண்பன் என்னை காயப்படுத்தினார்.”
சில நேரம் கழித்து, அவர்கள் இருவரும் தண்ணீர் குடிக்கச் சென்றார்கள். அப்போது, அறை வாங்கிய நண்பன் திடீரென மணலில் சிக்கிக்கொண்டான். அவனை மற்றொருவன் கஷ்டப்பட்டு காப்பாற்றினான்.
மேலே வந்ததும் அவன் ஒரு கல்லின் மீது எழுதியான்:
👉 “இன்று என் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினார்.”
அதைப் பார்த்து காப்பாற்றியவன் ஆச்சரியமாக கேட்டான்:
“அறைந்ததை மணலில் எழுதினாய், காப்பாற்றியதை கல்லில் எழுதினா ய்… ஏன்?”
அதற்கு நண்பன் சிரித்தவாறே சொன்னான்:
💬 “யாராவது கஷ்டம் தந்தால் அதை மணலில் எழுத வேண்டும். மன்னிப்பு என்னும் காற்று அதை அழித்துவிடும்.
ஆனால் யாராவது நன்மை செய்தால், அதை கல்லில் எழுத வேண்டும்… அது ஒருபோதும் அழியாமல் இருக்க!”
மறப்போம்… மன்னிப்போம்… நன்றி செலுத்துவோம்…




