கேரளா: கோழிக்கோட்டின் எரஞ்சிபாலத்தில் உள்ள வீட்டில் மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இறந்தவர் அத்தோலியைச் சேர்ந்த ஆயிஷா ராஷா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடன் தங்கியிருந்த காதலன் பஷீருதீனை போலீசார் கைது செய்தனர். ஆயிஷாவின் மரணம் தற்கொலை அல்ல, கொலை என்று உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இவர் மங்களூருவில் உள்ள கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்த நிலையில், ஓணத்திற்காக அண்மையில் கோழிக்கோடு வந்துள்ளார்.




