காது வலிக்கு……
தாங்க முடியாத காது வலிக்கு வெள்ளை ஊமத்தம் பூவை கசக்கி அதன் சாற்றில் இரண்டு சொட்டுகளை காதில் விட்டால் போதும், வலி உடனே நின்றுவிடும்.
பித்த நோய் குணமாக….
பித்தம் சம்பந்தமான நோய்க்கு விளாம்பழம் வரப்பிரசாதமாகும். ஒரு நாளைக்கு ஒரு விளாம்பழம் வீதம் 21 நாட்களுக்கு விடாது சாப்பிட்டு வந்தால் பித்தத்தொடர்பான வியாதிகள் தலை காட்டாது.
சொறி சிரங்கு மாற….
சொறி சிரங்கு நீங்க கடலை எண்ணெயில் சிறிது ஓமத்தைப்போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயை சிரங்கின் மீது தடவி சிறிது நேரம் ஊற வைத்து பிறகு இலுப்பைப் பிண்ணாக்குத் தூளில் கழுவி வந்தால் போதும். சொறி, சிரங்கு உபத்திரவம் போய்விடும்……




