காபி பொடியை இப்படி சேமித்து வைத்தால், வருடக் கணக்கில் கெடாமல் இருக்குமாம்..!!

பெரும்பாலான நபர்களுக்கு காபி குடிக்கும் பழக்கம் இருக்கும், ‘ காபி குடிக்காம நாளே விடியாது’ என சொல்லும் நபர்கள் தான் அதிகம்.

இப்படி உலகம் முழுவதும் காபி பிரியர்கள் ஏராளம். இதற்கு மிக முக்கிய காரணம் காபி குடித்தவுடன் உடலுக்கு கிடைக்கும் புத்துணர்வு தான்.

காபியில் இருக்கும் காபீன் எனும் வேதிப்பொருள் தான் இரத்தத்தில் ஆண்டி ஆக்ஸிடண்ட்களை அதிகரித்து காபியை குடித்தவுடனேயே உடனடியாக இரத்த செல்களுக்கு புத்துணர்வு வழங்கி நமது மூளையில் சுறுசுறுப்பு உணர்வை தூண்டுகின்றது.

இப்படி அனைவருக்கும் பிடித்த காப்பியை சுவையாக தயாரிக்க வேண்டும் என்றால் காப்பி பொடி சிறந்த பதத்தில் இருக்க வேண்டியது அவசியம். காப்பி பொடியை சுவை மணம் மாறாமல்  நீண்ட நாட்கள் வீட்டில் எவ்வாறு பாதுகாத்து வைக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

காப்பியை எவ்வாறு சேமிக்க வேண்டும்?

வறுத்த காபி கொட்டைகள் அல்லது சீல் செய்யப்பட்ட காபி பாக்கெட்டுகளை பல வருடங்களுக்கு புத்துணர்வுடனும் நறுமணத்துடனும் வைத்திருக்க  காற்று உள்ளே செல்ல இயலாத டப்பாக்களில் உடனடியாக அடைத்து வைக்க வேண்டும்.

காற்று பட்டால் காப்பி பொடியின்  சுவை, வாசனை, அமைப்பு போன்றவற்றில் மாற்றம் ஏற்பட்டு விடும் பின்னர் அதன் தனித்தன்மையான வாசனையை மீட்டெடுக்க முடியாது.

காப்பி பொடியை வெளிச்சம் படும் வகையிலும் வைப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.  அதனாலும் காப்பியின் சுவை குறையலாம். எனவே எப்பொழுதும் காபி பொடியை வெளிச்சம் உற்செல்லாத டப்பாக்களில் சேமித்து வைப்பது முக்கியம்.

காபி டப்பாவை எப்பொழுதுமே குளிர்ந்த மற்றும் இருண்ட இடத்தில் வைப்பது அவசியம். வெப்பம் மற்றும் சூரிய வெளிச்சத்தில் இருந்தும் அடுப்பு அல்லது வெப்பத்தை உருவாக்கக்கூடிய பொருட்களிடம் இருந்தும் காப்பியை தூரமாக்கி வைக்க வேண்டும்.

மிகையான வாசனை கொண்ட உணவுகளுக்கு அருகில் காப்பியை சேமித்து வைப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். காப்பிக்கு அதன் சூழலில் இருக்கக்கூடிய வாசனைகளை உறிஞ்சும் தன்மை அதிகமாக காணப்படுகின்றது.

Read Previous

மறைந்த ராணுவ வீரரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி..!! முதல்வர் அறிவிப்பு..!!

Read Next

ஒவ்வொரு மரணமும் ஒரு சேதி சொல்லும் ஆனால் அது நமக்குத்தான் தெரிவதில்லை புரிவதில்லை..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular