வேலூர்: திருவலம் அடுத்த அம்முண்டி பகுதியில் அதிவேகமாகச் சென்ற இருசக்கர வாகனம் எதிரே வந்த கார் மீது மோதியதில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். வேலூரில் எம்.டெக். பயின்று வந்த கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கௌதம் (25) மற்றும் வேலூரைச் சேர்ந்த கோகுல் (25) ஆகிய இரு பொறியியல் மாணவர்கள் சனிக்கிழமை இரவு உயிரிழந்தனர். திருவலம் போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




