பெரும் சோகம்..!! பொங்கல் பரிசு வாங்கச் சென்ற மூதாட்டி உயிரிழப்பு..!!

கோவை: பேரூர் அருகே வேடபட்டி சத்யா நகரைச் சேர்ந்த 87 வயதான வீரம்மாள், பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க நாகராஜபுரம் பஸ் நிறுத்தம் பகுதிக்கு ஆட்டோவில் வந்துள்ளார். ரேஷன் கடைக்கு நடந்து செல்லும் வழியில் சாலையோரம் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

கார் மோதி பொறியியல் மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

3 MLA-க்களை பாமகவில் இருந்து அதிரடியாக நீக்கிய ராமதாஸ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular