சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, மதுக்கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை ‘டாஸ்மாக்’ நிறுவனம் அமல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தால், ஊழியர்களுக்கு ஏற்படும் பணிச்சுமையை அறியவும், அதை எவ்வாறு சரி செய்வது என்பதற்கான யோசனை வழங்கவும் மண்டல அளவில் குழுக்களை டாஸ்மாக் நிறுவனம் அமைத்துள்ளது. காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்திற்கு, தனி ஊழியர்களை நியமிக்க கோரிக்கை எழுந்துள்ளது.




