தமிழகத்தில் 2,511 பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் நாளை செப்., 3 மற்றும் நாளை மறுநாள் 4 ஆகிய தேதிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கலந்தாய்வு நடைபெறும் மையங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட கடிதம் மற்றும் தற்காலிக தேர்வு கடிதம் ஆகியவற்றுடன் வருகை தர அறிவுறுத்தப்பட்டுள்ளது.




