உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை எடுத்துக் கொள்வதில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் ஆனால் காலை வேளையில் உடலுக்கு தேவையான ஆரோக்கியம் நிறைந்த ஜூசை குடிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்வாகவும் செயல்படும்…
ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி இருப்பதால் தினமும் காலையில் அதை குடிப்பது உடலுக்கு நல்லது என வல்லுநர்கள் கூறுகின்றனர் இருப்பினும் ஆரஞ்சு ஜூஸில் சர்க்கரை சேர்க்காமல் தேன் அல்லது பனைவெல்லம் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு மேலும் ஆரோக்கியத்தை தரும் என்கிறார்கள். தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாக பராமரித்து இளமையாக இருக்கலாம் என கூறியுள்ளனர், அதேபோல் காலையில் பீட்ரூட் ஜூஸ் எடுப்பதன் மூலம் உடல் புத்துணர்வாகும் சருமம் பளிச்சின்றும் காணப்படும் மேலும் உடலுக்கு தேவையான ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும், மேலும் கருப்பு உளுந்தை ஊறவைத்து அதனை காலை வேளையில் அரைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வருவதன் மூலம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும் இதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்வாகவும் செயல்படும்..!!




