இந்த அறிகுறிகள் இருக்கா?.. அப்போ கட்டாயம் சிறுநீ்ரகம் பாதிக்கப்பட்டிருக்கும்..!!

உடலில் காணப்படும் நச்சுப் பொருட்களை வெளியேற்றுகின்ற பிரதான தொழிலை சிறுநீரகம் செய்கின்றது.

நாம் உண்ணும் உணவிலும் எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளிலும் உள்ள நச்சுப்பொருள்களும் சிறுநீர் மூலமாகவே வெளியேறுகின்றது.

சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாதபோது, உடலில் மற்ற உறுப்புக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சில மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம்.

இவ்வாறு நிறுநீரகம் பாதிக்கப்படும் போது உடலில் முன்கூட்டியே சில அறிகுறிகள் உணர்த்திவிடும் அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

 

சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகள்

பாதங்கள் மற்றும் கணுக்கால்களில் காணப்படும் வீக்கம் சிறுநீரக பாதிப்பின் முதல் கட்ட அறிகுறியாக காணப்படுகின்றது.

எடிமா என்றும் அழைக்கப்படும் இந்த நிலை சிறுநீரகங்கள் கழிவு பொருட்கள் மற்றும் இரத்தத்தில் இருந்து அதிகப்படியான திரவத்தை வடிகட்ட சரியாக வேலை செய்யவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றது. இந்த அறிகுறியை அலட்சியமாக எடுத்துக்கொள்ள கூடாது.

 

இரவு நேரங்களில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை, நோக்டூரியா என்றும் அழைக்கப்படுகிறது, இது சிறுநீரக நோயின் பொதுவான அறிகுறியாகும்.

சிறுநீரக செயல்பாடு குறைதல், திரவம் தக்க வைக்கும் தன்மை குறைதல் போன்றவற்றின் அறிகுறியாகவே இது காணப்படுகின்றது.

 

 

உங்கள் சிறுநீர்ப்பை முழுவதுமாக காலியாகவில்லை என்றும், மீண்டும் கழிவறைக்குச் செல்ல வேண்டும் என்றும் நீங்கள் உணர்ந்ததால், இரவில் நல்ல தூக்கத்தை அனுபவிக்க முடியாமல் போகும். இந்த அறிகுறி இருந்தால், உங்கள் சிறுநீரகத்தை பரிசோதிக்க வேண்டும்.

 

 

தூங்கும் போது சிறுநீர் கசிவு இருந்தால், அது சிறுநீரகப் பாதிப்பின் மற்றொரு எச்சரிக்கை அறிகுறி. சிறுநீரகங்கள் முக்கியமாக உடலில் இருந்து நச்சுகளை சிறுநீர் வடிவில் வெளியேற்ற உதவுகின்றன. அது நடக்காதபோது, உடலில் திரவங்கள் குவிந்து, சிறுநீர்ப்பை சரியாகச் செயல்படாது.

இதனால் நீங்கள் தூங்கும் போதும் சிறுநீர் கழிக்கலாம். உங்கள் சிறுநீரகங்கள் சரியாக செயல்படாத போது தோன்றும் ஒரு எச்சரிக்கை அறிகுறி இரவில் சரியாக தூங்க முடியாமல் போவது.

 

 

தூக்கமில்லாத இரவுகள் வேறு உடல்நலப் பிரச்சினைகளாலும் ஏற்படலாம். எனினும், மேற் கூறிய அறிகுறிகளோடு தூக்கமின்மையும் இருந்தால் இது சிறுநீரகம் செயலிழப்புக்காக அறிகுறியாகும்.

 

இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். முன்கூட்டியே சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் பாரிய ஆபத்துக்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

Read Previous

இரவு முழுவதும் தலையில் எண்ணெய் வச்சிக்கிட்டு படுப்பது நல்லதா?.. நீண்ட கூந்தலுக்காக தெரிஞ்சிக்கோங்க..!!

Read Next

பணத்தை ஈர்க்க வேண்டுமா?.. பச்சை கற்பூரத்தை இப்படி பயன்படுத்துங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular