குடும்பத்தில் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய வீட்டு பூஜை குறிப்புகள்..!!
தினசரி காலையும் மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும்.
தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில் மற்றும் கோபுரம் மற்றும் சிவலிங்கம் அதுமட்டுமின்றி தெய்வப் படங்கள் மற்றும் நல்ல புஷ்பங்கள் மேகம் சூழ்ந்த மலைகள் தீபம் கண்ணாடி சந்தனம் பசு உள்ளங்கை மனைவி மற்றும் குழந்தைகள்.
நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசி செடி வேப்பமரம் இருக்க வேண்டும் அதனால் எந்தவித நோயும் வராது விஷ ஜந்துகளும் நம்மை அண்டாது தூய்மையான காற்றும் நமக்கு கிடைக்கும்.
வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவையில்லாத உடைந்த பொருட்களை சேர்த்து வைக்காதீர்கள் இது இறை சக்தியை குறைக்கும். அங்கு ஆன்மீக அதிர்வுகள் ஏற்படாது மிகக் குறைந்த பூஜை பொருட்கள் மட்டும் வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.
சிவன் பார்வதி விநாயகர் முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால் அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சிறிது சிறிதாக நீக்கும்.
நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும்.
அம்மாவாசை திவசம் ஆகிய நாட்களில் வாசலில் ஒருபோதும் கோலமிடக்கூடாது.அம்மாவாசை பௌர்ணமி மாதப்பிறப்பு ஜென்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது.




