குடும்பத்தில் மகிழ்ச்சியை இழப்பதற்கு முதல் காரணம் இந்த ஈகோ தான்.. என்பதை உணர்த்திய அருமையான பதிவு..!!

Oplus_131072

குடும்பத்தில் மகிழ்ச்சியை இழப்பதற்கு முதல் காரணம் இந்த ஈகோ தான்..

#கணவனோ மனைவியோ ..
உங்க ஈகோ என்னும் தொப்பியை அணிந்து கொண்டே இருக்காதீர்கள்..
அந்த தொப்பியை கழட்டி எறியுங்கள்..

பொண்டாட்டி சொன்னா புருஷன் கேட்க வேண்டும்…. புருஷன் சொன்ன பொண்டாட்டி கேட்க வேண்டும்…
நீ சொல்லி நான் கேட்கவா என்று சொன்ன.. குடும்பத்தில் பிரச்சினை தான்… வரும்..

பெரும்பாலான கணவர்கள் தான் சொல்வதைத்தான் பொண்டாட்டி கேட்க்க
வேண்டும் என்று நினைக்கிறார்கள்
இது தவறு… அந்த காலத்தில் பெண்கள் வேலைக்குச் செல்லவதில்லை..
பணம் சம்பாதிக்க வில்லை.. இப்போது எல்லா பெண்களும் வேலைக்கு போகிறார்கள் பணம் சம்பாதிக்கிறார்கள்.
அதனால் இந்த காலத்தில் நீங்க சொல்வதை கேட்க்க வேண்டும் என்று நினைத்தால் இது தவறு….

பொண்டாட்டி வேலைக்கு போயிட்டு வந்த புருஷன் பொண்டாட்டிக்கு உதவியாக இருக்க வேண்டும்.. அது பெண்களுடைய வேலைதானே என்று எண்ணக்கூடாது… அப்படி எண்ணிவிட்டால் அந்த இடத்தில் பிரச்சினைதான்…. வரும்..

வேலைக்கு போற பெண்களுக்கு பல பிரச்சனைகள் இருக்கும் அந்த பிரச்சனைகளை சமாளித்து தான் வேலை செய்கிறார்கள் வீட்டுக்கு வந்தால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைக்கும் போது நீங்கள் ஏதாவது சொல்லும் போது அவர்களுக்கு
மனசு கஷ்டமாக இருக்கும்…

வீட்டு வேலைகளை சரிசமமாக செய்து பாருங்கள் வீட்டில் எந்த பிரச்சனையும் வராது…. உங்கள் வீட்டில் தான் வேலை செய்கிறார்கள் இதில் எந்த தவறும் இல்லை…..

முக்கியமாக பெண்களின் அந்த மூன்று நாட்களில் ஓய்வு கொடுங்கள்… எல்லா பெண்களும் இதைத் தான் எதிர்பார்க்கிறீர்கள்…

உங்கள் பிள்ளைகளுக்கு வீட்டு வேலை செய்ய கற்றுக்கொடுங்கள்….ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி …. வீட்டில் எல்லோரும் வேலை செய்யும் போது பெண்களுக்கு வேலை பளு குறையும்…

கணவன் ஒரு முடிவு எடுக்கும் போது மனைவியிடம் ஆலோசனை கேளுங்கள்…
மனைவி நிர்வாகம் செய்யும் வீட்டில்
வளமான செல்வம் தங்கும்……
பெண்கள் சந்தோஷமாக இருக்கும் வீட்டில் மகிழ்ச்சி எப்போதும் இருக்கும்…..

Read Previous

ஆகாச கருடன் கிழங்கு..!! பற்றிய அற்புதமான பதிவு கட்டாயம் படிங்க..!!

Read Next

யானை பற்றி ஆச்சரியமூட்டும் உண்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular