திருநெல்வேலி: முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர்கள் சகரியா-மெர்சி தம்பதி. இவர்களுக்கு பினோ (27) என்ற மகள் உள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக 3 பேரும் இன்று (ஆகஸ்ட் 24) மாலை வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், படுகாயமடைந்த மெர்சி மற்றும் பினோ சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.




