மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை..!!

மதுரையில் இரவில் கொட்டி தீர்த்த மழையால் பெரும்பாலான பகுதியில் குளம் போல மழைநீர் தேங்கியது.

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், இரவில் திடீரென கனமழை பெய்ய தொடங்கியது.

குறிப்பாக, ஒத்தக்கடை, திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், மாநகர் பகுதியான மாட்டுத்தாவணி, பழங்காநத்தம், ஆரப்பாளையம் , கோரிப்பாளையம், சிம்மக்கல் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

இதனால் சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கியதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்தனர்.

Read Previous

குடும்ப பிரச்சினையில் தாய், மகன் தீக்குளித்து உயிரிழந்த சோகம்..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

சிலிண்டரை படுக்க வைத்து யூஸ் பண்ணலாமா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular