தமிழ் சினிமாவின் ஜாம்பவானாகவும், சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த ’கேப்டன்’ விஜயகாந்தின் பிறந்தநாள் இன்று (ஆக. 25). 1952 ஆகஸ்ட் 25ம் தேதி விஜயகாந்த் மதுரையில் பிறந்தார். சிறு வயது முதலே அவருக்கு நடிப்பின் மீது தீராத காதல் இருந்தது. கடும் முயற்சிக்கு பிறகு சினிமாவில் நடிகரானார். பின்னர் அரசியலிலும் களம் இறங்கி சாதித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார் .காலம் அவரை அழைத்துக் கொண்டாலும் அவரது புகழ் என்றும் காற்றில் நிலைத்திருக்கிறது.




