Oplus_16908288
கொடைக்கானலில் மனைவி உயிரிழந்த துயரத்தை தாங்க முடியாமல் முதியவர் ஒருவர் நட்சத்திர ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது ஏரியில் படகு இயக்கிக் கொண்டிருந்த படகு ஓட்டுநர்கள் உடனடியாக விரைந்து சென்று, முதியவரை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவருக்கு ஆறுதல் கூறி, குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, முதியவர் பாதுகாப்பாக அவர்களுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். படகு ஓட்டுநர்களின் துரித நடவடிக்கையால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




