ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா அருகே மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மோகன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், கடன் தர மூதாட்டி மறுத்ததால் ஆத்திரமடைந்த மோகன், அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும், பின்னர் அவர் அணிந்திருந்த தங்க கம்மலை பறித்துச் சென்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொடூரச் சம்பவம் ஏர்வாடி பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




