சட்டப்பேரவையில் வார்த்தைப் போர்.. உதயநிதி – அமைச்சர் நிர்மல்குமார் இடையே காரசார மோதல்!

 

தமிழக சட்டப்பேரவையில் மின்சாரத்துறை தொடர்பான விவாதத்தின்போது, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சர் நிர்மல்குமார் “கரூர் கம்பெனி” என்றும், “கோவை எம்.எல்.ஏ.” என்றும் குறிப்பிட்டு பேசியது திமுக உறுப்பினர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் விவாதத்தில் குறுக்கிட்டார். அப்போது அமைச்சர் குறித்து பேசும்போது உதயநிதி ஒரு வார்த்தையை குறிப்பிட்டு, பின்னர் “சாரி” என மாற்றிக் கூறினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், எதிர்க்கட்சித் தலைவரை விமர்சிக்கும் வகையில், “பாத்ரூமில் 3 மணி நேரம் அமர்ந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர்” என்று கூறினால் அதை ஏற்றுக்கொள்வீர்களா என கேள்வி எழுப்பினார்.

இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியதால், சட்டப்பேரவையில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பும், பதிலடியும் காரணமாக மின்சாரத்துறை விவாதம் அரசியல் மோதலாக மாறியது.

Read Previous

சட்டப்பேரவையில் ‘கரூர் கம்பெனி’ சர்ச்சை.. செந்தில்பாலாஜி காட்டமான பதில்!

Read Next

சட்டப்பேரவையில் மின் கட்டணம் குறித்து செந்தில்பாலாஜி புகார்.. அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular