சட்னியை இப்படி செய்தால் ஒரு நொடி கூட தோசை தட்டில் இருக்காது ..!! சுவையான வேர்க்கடலை சட்னியின் செய்முறை ..!!

பொதுவாக , அனைவரின் வீட்டிலும் காலையிலும் மாலையிலும் இட்லி தோசையை தான் உணவாக உன்வார்கள்.

இதற்கு தினமும் சட்னி செய்வது நம் தாய்மார்களின் வழக்கம் .  அனால் ,  ஒரே வகை சட்னி செய்தால் உண்பவர்களுக்கு சலித்து விடும் .  விதவிதமாக செய்தாலோ தட்டில் இருக்கும் உணவு நொடிகளில் காணாமல் போய்விடும் .

அப்படி செய்ய ,  வேர்க்கடலை சட்னி மிகவும் சரியான தேர்வு .  வெறும் சில பொருட்களை வைத்து இதை எப்படி செய்யலாம் என்று காண்போம் . இது மேலும் சாதம் ,  உப்புமா போன்ற உணவுகளுக்கு சிறந்ததாக இருக்கும் .

அதின் செய்முறை :

தேவையான பொருட்கள்:

  • வேர்க்கடலை – 1/2 கப்
  • துருவிய தேங்காய் – 1/2 கப்
  • புளி – சிறிய துண்டு
  • வரமிளகாய் – 2-3
  • உப்பு – சுவைக்கேற்ப
  • பூண்டு – 3 பல்
  • தண்ணீர் – சிறிது
  • எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • கடுகு – 1/2 டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – 1 கொத்து
  • பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்

 சட்னி செய்வது எப்படி?

வேர்க்கடலையை முதலில் நன்றாக வருத்து ஆற விட வேண்டும் .

அதன்பிறகு ,  அதை ஜாரில் போட்டு, துருவிய தேங்காய் ,  சிறிது புளி , வரமிளகாய் ,  உப்பு பொட்டு நன்றாக அரைத்து எடுக்க வேண்டும் .

பூண்டை சேர்த்துகொண்டால் சுவை பல மடங்கு அதிகரிக்கும் .  ஆகையால் பூண்டு பிடித்தவர்கள் அதையும் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும் .

அரைத்ததை ஒரு பாத்திரத்தில் மாற்றி, சிறிதளவு தண்ணீர் சேற்றுக்கொள்ளவும் .  அடுத்து ,  தாளிப்பிற்காக வாணலியை சூடு செய்து அதில் என்னை ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பில்லை , பெருங்காயம் தூள் சேர்த்து சூடானதும் சட்னியை ஊற்றி கலந்து கொள்ளவும் .

இதை உண்பதன் மூலம் உடம்பில் ஏற்படும் சளி மற்றும் இருமல் குணம்செய்யப்படும் .  சுவையான வேர்க்கடலை சட்னி தயார் .

Read Previous

வீட்டில் உள்ள கொசுக்களை விரட்ட எளிய வழிகள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

அமைச்சர் செந்தில் பாலாஜியை வெட்கப்பட வைத்த கருப்பணன்..!! காரணம் என்ன தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular